சனிக்கிழமை இன்று வணங்க வேண்டிய தெய்வங்கள் 👇
#ஆன்மிகம் #ஆன்மீகதகவல் #aanmeekam #aanmeekathakaval #saturday #sanikilamai
ஒவ்வ்ரு நாளும் ஒவ்வொரு பிறப்பு நமக்கு. இந்த நாளை வெற்றிகரமாக அமைத்துக்கொடுக்கும் நம் இறைவனுக்கு நன்றி சொல்லுவோம். சனிக்கிழமை என்றாலே பெருமாள் தான் நினைவுக்கு வருவார். சனிக்கிழமை வைணவர்களுக்கு உரிய நாளாக விளங்குகிறது என்று நமக்குத்தெரியும். ஆனால் சனிக்கிழமைகளில் பெருமாளை மட்டும் வழிபடுவதற்கு உகந்த நாள் இல்லை. சிலர் ஆஞ்சனேயர் , சனிபகவான் என்று வழிபடுவோருக்கு உண்டு. சனிக்கிழமைகளில் சனி பகவானை வணங்க சனிபகவானால் ஏற்படும் இடர்கள் நீங்கும் என்பது ஐதீகம். சிலர் சனிக்கிழமைகளில் கருப்பு நிற ஆடை அணிந்து விரதம் இருந்து வழிபடுவர். அவ்வாறு வழிபட்டால் துன்பங்கள் நீங்கி நல் பலன்களைப் பெறலாம் என்பது நம்பிக்கை.
Advertise
சனிக்கிழமைகளில் சிவ பெருமானை வணங்குதல் மிகச்சிறப்பு. அவ்வாறு வழிபாடும் போது அளவில்லா நன்மைகள் கிடைக்கப்பெறும். ஒரு முறை சனிக்கிழமைகளில் சிவன் கோவிலுக்கு சென்று பாருங்கள். அதன் பலன்களை நீங்கள் உணர முடியும். சனிக்கிழமை என்பது சனிபகவானுக்கு உரிய நாள் ஆகும். சனி பகவானுக்கு அச்சாரமாக திகழும் சிவா பெருமானை வணங்கும் போது நவக்கிரக தோஷங்கள் நீங்கி வாழ்வில் வலம் சேரும்.
அது போல சனிக்கிழமைகளில் பைரவர் வழிபாடும் சிறப்பு தரும். சனிக்கிழமை என்றால் பெருமாள் கோவில் நினைவுக்கு வரும். அதிலும் சிறப்பு என்னவென்றால் பெருமாள் கோவில் என்றாலே புளியோதரை நினைவுக்கு வரும். ஆம் இந்த நாளில் புளியோதரை நைவேத்தியம் செய்வது மிகவும் சிறப்பு தரும். திருப்பதி வெங்கடாச்சல பெருமாளுக்கு இன்று புளியோதரை பிரசாதமாக வைக்கப்படும்.
வேண்டிய வரங்களைப்பெற அந்த வேங்கடவனை வழிபட வேண்டிய நல்ல நாள் சனிக்கிழமை ஆகும்.
Comments
Post a Comment