ஆரூர் தியாகேச பெருமானே
சுந்தரர் மேல் பேரன்பு கொண்ட தியாகேச பெருமானை வணங்கி இங்கு நாம் தொடங்குகிறோம். எல்லாவற்றிற்கும் முதலானதும் முதன்மையானதுமான அப்பன் என்பதால் என்னை ஈன்ற அன்னையவளும் அப்பன் அந்த ஈசன் தான் என்று அவன் நாமத்தையே பாடுகிறான். உலக உயிர்களை பிரசவித்த எல்லா உயிர்களும் அவனையே பாடுகின்றன அதனால் தான் மாணிக்கவாசகர் பாடுகிறார். தாயை விட சிறந்த தயை அளிக்கும் எம்பிரான் ஈசன் என்று.
" என் அன்னையவளும் சொன்னாளே.
அப்பன் நீ தானே "
உன் மலரடி பட ஏங்கி ஏங்கி உயிர் நீத்தோர் ஏராளம். மனிதப்பிறவி எடுத்து கர்ம வினைகளை அனுபவித்து இறந்த பிறகு ( வட்டார வழக்கில் ) தலை போன பிறகு இந்த தலையில் இறைவன் தன் மலரடியை பதிக்க மாட்டானா? என்று ஏங்கித்தவிப்போர் உண்டு. கோவில் கொடி மரங்களில் சாஸ்தாங்கமாக விழுந்து வணங்குவோர் உண்டு. தரையோடு தலை வைத்து வணங்குவார்.
உன் மலரடி படத்தானே
தரையோடு தலை வைத்தேனே "
ஆடும் அழகிலும் அவன் அசையும் அழகிலும் அந்த தில்லை அம்பலத்தானின் நடனத்தைக் கண்டு கலியுறுவோமே அந்த ஆனந்தத்தை என்னவென்று சொல்வது ?? . அந்த தில்லை அம்பலத்தில் ஆடும் அழகை ரசிக்க பாற்கடலில் பாம்பின் படுக்கையோடு வசிக்கும் சீனிவாசன் கூட காத்திருந்தாரே!!! அப்படிப்பட்ட தில்லை அம்பலவன் திருவாரூர் தியாகேசனாய் இருக்கும் அழகைக் காண நம் கண்கள் அடுத்தவரிடம் சொல்லும் இந்த வரி
" பாரப்பா, பாரப்பா இந்த
தியாகேசனை பாரப்பா "
புண்ணிய காலமான பிரதோஷ காலத்தில் தீவினைகள் மாய்த்து இந்த உலகத்தில் இன்பம் நிலைபெற்று இருக்க மாலை நேர வேளையில் அங்கம் துலக்கி சிவ அடியாரின் மூத்த அடியார் நந்தியம்பெருமான் மீது அன்னை உமையாளோடு வலம் வரும்போது ஐம்பொன் பொன்மேனி கதிரவன் ஒளி பூசி தங்கமாய் ஜொலிக்கும் போது நம் மனம் பாடும் பாடல்
" கதிரவன் ஒளிபட்டு
ஜொலிச்சிட்டதோ பொன்மேனி - உன்மேனி"
நறுமணம் மிக்க மலர்களாலும் , தூப தீபங்களாலும் மனம் மயங்கி நிற்கும் போது நம்மை அறியாமல் நமது மனம் எம்பெருமானால் நம்மை அறியாமல் ஆட்கொள்ளப்படும். அந்த நிமிடம் ஆச்சர்யத்துக்கான வரிகள்
" அப்பா பாரப்பா
எங்களை ஆட்கொண்டு விட்டாயப்பா "
ஒரு தாய் தான் குழந்தைகளை தூங்க வைக்க ஆராரோ பாடுவார். அதுபோல நம் கவலைகளை மறக்கச்செய்ய இறைவனை பாடல் பாடுமாறு வேண்டி கேட்டுக் கொள்ளுதல்
" பாட்டு ஒண்ணு பாடப்பா
பஞ்சா போகட்டும் என் கவலையெல்லாம் "
Comments
Post a Comment