Skip to main content

Posts

நெடுஞ்சாலை வாழ்க்கை

குளிர்ந்து பின் நெருப்பாகி மறுபடியும் குளிர்ந்து கொண்டிருக்கிறது சாலை ஏற்ற இறக்கத்தோடு மாற்றம் ஒன்றே மாறாத உண்மை என்ற தத்துவத்தோடு வானம் என்னும் கூரைக்கு கீழே வாழும் நாங்கள் நெடுஞ்சாலை வாசிகள் அவ்வப்போது கண்ணீர் சிந்தும் வானம் - எங்களுக்காக கண்ணீரில் நினைத்தபடி கடந்து கொண்டே செல்கிறது வாழ்க்கை அளவுக்கு மிஞ்சி அள்ளியதால் கைக்கொள்ளாமல் சிந்தும் வெப்பக்கதிர்கள் வேறு ..... வீண் என்று ஒதுக்கிய உணவுகளெல்லாம் அமிர்தம் போல காட்சியளிப்பதெல்லாம் பசி தந்த வரத்தினாலே அத்தனையும் அனுபவித்துவிட்டு அணைந்து விடுகிறது வாழ்க்கை நெடுஞ்சாலை ஓரத்திலே.......
Recent posts

தமிழன்னை

படித்துவிட்டு கருத்துக்களை பதிவிடுங்கள் வட திசையில் தலை வைத்தால் ஆகாது என்று தென் திசை கொண்டாளோ?? இந்த கன்னி இளம் குமரி கண்ட அவளுக்கு தலையணை எல்லாம் புலவனின் நூல் தானோ ?? அழகிய மொழி கொண்டு சீராட்டி வளர்த்தான் என் பாட்டன் புலவரெல்லாம் சொல்லேற்றி கவிபாடும் என் தமிழன்னையே வீணை நரம்பென மீட்டிவிடு என்னை இசை தெறிக்கும் பக்கமெல்லாம் என் இன்பத் தமிழும் பரவட்டும்....

தரிசனம்

ராமனைக் கண்டவுடன் அனுமனின் பூரிப்பு அதிகமானது இங்கே அனுமன் ஒவ்வொரு கேள்வியாக கேட்க ராமன் அவனைப்புரிந்து கொண்டு பதில் அளிக்கிறான்.  ராமா நம் வாழ்வை உருவாக்குவது நாம் செய்யும் தேர்வா ?? . அல்லது ஏற்கனவே உருவாக்கப்பட்டதா?  சற்று நேரம் அமைதியாய் இருந்த ராமன் தன் பதில்களை மலர் போல உதிர்த்து விடுகிறான். அனுமா , நம்முடைய வாழ்க்கை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது தான் காரணம் என்னவெனில் நாம் செய்யும் செயல் நிறைவடைய நிறைய முயற்சிகளை மேற்கொள்கிறோம் ஆனால் அத்தனையும் வெற்றியடைவது இல்லை காரணம் முன்னரே தீர்மானிக்கப்பட்டவை தான் நம் நாட்டில் வெற்றிகரமாக இயக்கப்படும் என்று எண்ணி நாம் செயல்படுத்தக்கூடிய ராக்கெட்டுகள் கூட பல நேரங்களில் தோல்வியை தழுவுகின்றன நம்முடைய தேர்வுகள் நம் வாழ்வை உருவாக்குகிறது எனில் ஒவ்வொரு நொடிக்கும் ஒவ்வொரு தேர்வு இருக்கும் ஏனெனில் மனம் நிலையற்றது அனுமா அடிக்கடி மனிதர்கள் எடுத்துக் கூறும் பகவத் கீதையின் ஒரு சாரம்சம் கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்பதை உற்று நோக்கினால் அதன் உண்மையான அர்த்தம் புரியும் அதன் அர்த்தம் இதுவே.  மனிதர்களில் ஒருவனாக உங்களை நான் கேட்கிறேன் துக்க...

தரிசனம் - 1

 நாம் தனிமையில் அமர்ந்திருக்கும் போது எதைப்பற்றியாவது நினைப்பது உண்டு . அன்றைய நாள் தனிமையில் யோகிகளையும் , மகான்களையும் பற்றிய நினைவு. சிந்திக்காமல் இருக்கின்ற வித்தையை இந்த பிரபஞ்சம் அவர்களுக்கு எப்படி கற்றுக் கொடுத்திருக்கிறது. எல்லோரும் முயல்கிறோம் ஆனால் ஏதாவது ஒரு பிடிப்பு இருக்கிறது. ஒருவேளை அவர்கள் சிந்தித்தால் யாரைப்பற்றி சிந்திப்பர். இறைவனைப்பற்றி சிந்திக்கிறார்கள் எனில் இறைவன் நம்மோடு வாழ்வதாக அர்த்தம். ஏனெனில் இல்லாத ஒன்றை சிந்திப்பது என்பது இயலாதவை. இறைவன் இல்லையெனில் அவர்கள் சிந்தனையில் நிறைந்திருப்பவர் யார்??.   நமதுஇந்து தர்மம் ஆதியும் அந்தமும் அற்றது. இந்து தர்மம் இரண்டு குழந்தைகளை நமக்கு கொடுத்திருக்கிறது. ஒன்றன் பெயர் பக்தி மார்க்கம் எனவும் , ஒன்றன் பெயர் ஞான மார்க்கம்.எனவும் ஆகும். நமக்கென அவைகள் வகுத்துக் கொடுத்தவை எதிர்கால சந்ததி நலமாய் வாழ நன்னெறியும் , நலம் பெற்றவை அடுத்த சந்ததிக்கு சொல்லும் பாடம் கடமை எனவும் , இந்த கடமைகளில் நாம் நழுவும் போது அவைகளை எடுத்துச்சொல்ல மகான்களின் உயர்வும் அவசியமாகிறது.  தமிழ் எழுத்துக்களை படைக்கும் போதே இறைவன் திட்...

ஆரூர் தியாகேச பெருமான்

ஆரூர் தியாகேச பெருமானே  சுந்தரர் மேல் பேரன்பு கொண்ட தியாகேச பெருமானை வணங்கி இங்கு நாம் தொடங்குகிறோம். எல்லாவற்றிற்கும் முதலானதும் முதன்மையானதுமான அப்பன் என்பதால் என்னை ஈன்ற அன்னையவளும் அப்பன் அந்த ஈசன் தான் என்று அவன் நாமத்தையே பாடுகிறான். உலக உயிர்களை பிரசவித்த எல்லா உயிர்களும் அவனையே பாடுகின்றன அதனால் தான் மாணிக்கவாசகர் பாடுகிறார். தாயை விட சிறந்த தயை அளிக்கும் எம்பிரான் ஈசன் என்று.   " என் அன்னையவளும் சொன்னாளே. அப்பன் நீ தானே "  உன் மலரடி பட ஏங்கி ஏங்கி உயிர் நீத்தோர் ஏராளம். மனிதப்பிறவி எடுத்து கர்ம வினைகளை அனுபவித்து இறந்த பிறகு ( வட்டார வழக்கில் ) தலை போன பிறகு இந்த தலையில் இறைவன் தன் மலரடியை பதிக்க மாட்டானா? என்று ஏங்கித்தவிப்போர் உண்டு. கோவில் கொடி மரங்களில் சாஸ்தாங்கமாக விழுந்து வணங்குவோர் உண்டு. தரையோடு தலை வைத்து வணங்குவார்.  உன் மலரடி படத்தானே தரையோடு தலை வைத்தேனே " ஆடும் அழகிலும் அவன் அசையும் அழகிலும் அந்த தில்லை அம்பலத்தானின் நடனத்தைக் கண்டு கலியுறுவோமே அந்த ஆனந்தத்தை என்னவென்று சொல்வது ?? . அந்த தில்லை அம்பலத்தி...

சனிக்கிழமை இன்று வணங்க வேண்டிய தெய்வங்கள்

  சனிக்கிழமை இன்று வணங்க வேண்டிய தெய்வங்கள் 👇   #ஆன்மிகம் #ஆன்மீகதகவல் #aanmeekam #aanmeekathakaval #saturday #sanikilamai ஒவ்வ்ரு நாளும் ஒவ்வொரு பிறப்பு நமக்கு. இந்த நாளை வெற்றிகரமாக அமைத்துக்கொடுக்கும் நம் இறைவனுக்கு நன்றி சொல்லுவோம். சனிக்கிழமை என்றாலே பெருமாள் தான் நினைவுக்கு வருவார். சனிக்கிழமை வைணவர்களுக்கு உரிய நாளாக விளங்குகிறது என்று நமக்குத்தெரியும். ஆனால் சனிக்கிழமைகளில் பெருமாளை மட்டும் வழிபடுவதற்கு உகந்த நாள் இல்லை. சிலர் ஆஞ்சனேயர் , சனிபகவான் என்று வழிபடுவோருக்கு உண்டு. சனிக்கிழமைகளில் சனி பகவானை வணங்க சனிபகவானால் ஏற்படும் இடர்கள் நீங்கும் என்பது ஐதீகம். சிலர் சனிக்கிழமைகளில் கருப்பு நிற ஆடை அணிந்து விரதம் இருந்து வழிபடுவர். அவ்வாறு வழிபட்டால் துன்பங்கள் நீங்கி நல் பலன்களைப் பெறலாம் என்பது நம்பிக்கை.  Advertise                சனிக்கிழமைகளில் சிவ பெருமானை வணங்குதல் மிகச்சிறப்பு. அவ்வாறு வழிபாடும் போது அளவில்லா நன்மைகள் கிடைக்கப்பெறும். ஒரு முறை சனிக்கிழமைகளில் சிவன் கோவிலுக்கு சென்று பாருங்கள். அதன் பலன்களை நீங்கள...

" உள்ளொன்று வைத்து புறமொன்று "

 உள்ளொன்று வைத்து புறமொன்று  இன்று உங்களுக்கு எல்லா வளமும் நலமும் இறைவன் அருளட்டும்  அருட்பெருஞ்ஜோதி  தனிப்பெருங்கருணை  " உள்ளொன்று வைத்து புறமொன்று " என்ற பாடல் பிறந்த கதை. இளவயது ஜோதியானது காஞ்சிபுரம் மகாவித்வான் சபாபதி முதலியாரிடம் கல்வி பயில வேண்டி  காலம் எடுத்துரைத்தது. ஆனால் அந்த அருட்பெருஞ்ஜோதியானது ஜோதியிலே உருவான கந்த கோட்ட பெருமானை அணுகியது. சந்தேகம் என்ற தூது சபாபதி முதலியாரை அருட்பெரும் ஜோதியை பின் தொடர ஜோதியானது கந்த கோட்ட பெருமானை நெருங்கி பண் இசைக்க ஆரம்பித்தது. அந்த பண் தான்  "உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் "                 ஆன்மீக பாதையின் தொடக்கம் அது தான். இனி உலகியல் கல்வி இவருக்கு தேவை இல்லை என்று தன குருவினால் உரைக்கப்பட்டு ஆன்மீக பயணத்தை தொடங்கினார். வள்ளலாரின் பாடல்களை கேட்டால் பட்ட மரத்தத்திலும் உள்ளொளி எழும்பும் . இந்த பாடலில் நீங்கள் என்ன உணர்ந்தீர்கள் என்பதை 9688884185 என்ற எண்ணில் பகிரலாம்.           அன்பார்ந்த பக்தர்கள...