வால்மீகி ராமாயணம் எழுதி முடித்துவிட்டு கொஞ்சம் செருக்கோடு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர் பட்டார் நாரதர். உண்மையை உணர்ந்த நாரதர்.
நீங்கள் எழுதியதைவிட இன்னும் சிறப்பாக ஒருவர் எழுதிஇருக்கிறார் ஒருவர். யார் என்று கேட்டார் முனிவர். அவர் தான் அனுமன். அங்கு ஏழு வாழையிலையில் எழுதி வைத்திருந்தார் அனுமான், வாங்கி படித்துவிட்டு கண்ணீர் சிந்த ஆரம்பித்தார். ஏனென்று கேட்டார் அனுமான். நான் எழுதியதை விட இது மிக சிறப்பாக இருக்கிறது. வருங்காலத்தில் மக்கள் இதையே பின்பற்றுவார் என்றார். உடனே அந்த ஏழு வாழையிலையை கசக்கி தூக்கி எறிந்துவிட்டார். என்ன காரியம் செய்கிறாய் ? என்று கேட்டார். உடனே அனுமான் சொன்னார் உங்களுக்குத்தான் புகழ் வேண்டும். எனக்கு ராம நாமமே போதும் என்றார். ஆணவம் அகன்றது முனிவருக்கு.
இது நமக்கு உணர்த்துவது " தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார் " அனுமான்.........
Comments
Post a Comment