அன்பு மகளே உனக்கான அறிவுரை....
பெண் என்பவளுக்கு அடையாளமே அன்புதான் நீ அன்போடு நடந்து கொள்வாய் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. பருவும் எய்தி இங்கு பல தடைகள் கடந்து வந்து விட்டாய் இன்னும் நீ கனிவோடு நடந்துகொள்ள வேண்டும். இனிதான் உன் வாழ்க்கை ஆரம்பம்.
மணம் முடித்து செல்கையிலே கண் கலங்கிவிடாதே.... ஏனெனில் உன் அம்மா பாவம்.. வளர்த்தவள் அல்லவா? அவள் அப்படித்தான். நான் உங்கம்மாவை அழைத்து வருகையில் என் மாமியார் அழவில்லை. ஏனெனில என் மாமியார் அப்படித்தான். 😁😁
தினமும் விளக்கேறறு. குண்டு பல்பும் சீரியல் செட்டும் இருக்குனு விட்டுவிடாதே. ஏனெனில நிறைந்த மகாலட்சுமி உன்னிடமே. அலுவலகம் சென்று திரும்பும் கணவனுக்கு ஆசையாய் ஏதேனும் செய்து வை. பொருளாதாரத்தைக் காட்டி அவற்றை பின்தள்ளி விடாதே. அழகாய் சமைத்து வை. வீணாகிவிடும் என்று நினைக்காதே. எதிர்வாதம் செய்யாதே எடுத்துச் சொல் அதுவும் அமைதியான சூழ்நிலையில், பிடிக்காது என்ற மனநிலையை தவிர்த்துக் கொள். அவற்றைப் பழகிக்கொள். எல்லாம் சில காலம் . உனக்கு பிடிக்காது என்பது தெரிந்து அவரே தவிர்த்துவிடுவார். ஆயிரம் பேர் சொல்வார் அப்படி இரு. இப்படி இரு என்று உனக்கு எது பிடிக்குமோ அதைச் செய். ஆனால் அனைத்தையும் கேட்டுக் கொள். வாழ்ககையை திட்டமிட்டு அமைத்துக் கொள்.
கடவுள் பக்தி கொள். பிறந்த வீட்டுப் பெருமையை பேசாதே. ஏனெனில் என்னையும் சேர்த்து கிழிப்பார்கள்😄😄. சமையல் நன்றாக கற்றுக்கொள். தோசை கருகியிருந்தால் தோசைச சட்டியை ஒரு முறை சோதித்துக் கொள் குப்புற கவிழ்த்திருக்கிறாயா? என்று 😄😄. கரண்டியை அழுத்திச் சுரண்டாதே. அது சமையலுக்கு அழகல்ல. நிம்மதியான வாழ்க்கையை வாழக் கற்றுக்கொள். அப்பா எப்போதும் கவனித்துக்கொண்டிருக்கிறேன். என்ற மனநிலைக்கு வா... காலையில் சீக்கிரம் எழு... அவர் எழுப்ப வேண்டும் என்று எண்ணாதே... நீ எங்களுக்கு பொக்கிசம்... ஆனால் அனைவருக்கும் அப்படி நீ என்று எதிர்பார்க்காதே..... எதிர்பார்த்தாய் என்றால் பொக்கிசத்தை parcel பண்ணி திருப்பி அனுப்பிடுவாங்க பாத்துக்கோ. பொன்னகை பூட்டி அனுப்புகிறோம். நீ அங்கே புன்னகை பூட்டு.
Excellent
ReplyDelete