வாழ்க்கையில் நாம் எதிர் பார்த்தது எல்லாமே அமைந்து விடாது . பல துன்பங்களில் இருந்து தான் ஒரு நல்லவை பிறக்கிறது. இது மனித வாழ்க்கைக்கு மட்டும் பொருந்துவது அல்ல அந்த இறைவனுக்கும் அது தான் விதி. பகவான் விஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரத்திலும் ஒவ்வொரு நண்மைகள். நமக்கு அவை கற்றுக்கொடுக்கும் விதமும் வெவ்வேறானவை.
ஏனெனில் நமது எண்ணங்களுக்கு ஏற்ப நமக்கான பாடம் அமைகிறது வாமணனுக்கு ஒரு வகையான பாடம் என்றால் ராமனுக்கு ஒருவகையான பாடம் அனைத்திலும் இறைவன் அசுரர்களை வதைத்ததன் நோக்கம் அவர்களை ஆட்கொள்ளவே.
எதிர் பார்த்த வாழ்க்கை அமைவது என்பது நமக்கு கிட்டாத ஓன்று. நம்மை எப்படி வலுப்படுத்த வேண்டும் ? வாழ்க்கை என்றால் என்ன ? என்று கற்றுக்கொடுத்தவர்கள் நமது முன்னோர்கள்
அந்த காவியங்களை படிக்கும் போது நமக்கு வரும் துன்பங்கள் எல்லாம் மிக சிறிதளவே என்று தோன்றுகிறது. எதிர்பார்த்தது கிடைக்காமல் போனால் நமக்கு எப்படி இருக்கும் ?. ஒரு சிறிய செயல் வேண்டி கிடைக்காமல் போனாலே நாம் இறைவனை வசை பாட ஆரம்பித்து விடுகிறோம்.
அதனால் தான் அரசனாக முடிசூட்டுவோம் என்று எதிர்பார்த்திருந்த ராமனுக்கு காத்திருந்தது அதிர்ச்சி. தந்தை மூலமாக கானகம் செல்ல பணிக்கப்படுகிறான் ராமன். அந்த சூழ்நிலையில் அதை ஏற்றுக்கொள்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. தந்தையின் உத்தரவுக்கு சற்றும் முகம் வாடவில்லை. ஏன் இப்படி என்ற சந்தேக குறி கூட கிடையாது ராமனது முகத்தில். அவர் கொடுத்தது எல்லாம் ஒரு புன்னகை மட்டுமே
ராமன் இங்கு நமக்கு கற்றுக்கொடுப்பது " இடுக்கண் வருங்கால் நகுக "
Comments
Post a Comment