ஆரூர் தியாகேச பெருமானே சுந்தரர் மேல் பேரன்பு கொண்ட தியாகேச பெருமானை வணங்கி இங்கு நாம் தொடங்குகிறோம். எல்லாவற்றிற்கும் முதலானதும் முதன்மையானதுமான அப்பன் என்பதால் என்னை ஈன்ற அன்னையவளும் அப்பன் அந்த ஈசன் தான் என்று அவன் நாமத்தையே பாடுகிறான். உலக உயிர்களை பிரசவித்த எல்லா உயிர்களும் அவனையே பாடுகின்றன அதனால் தான் மாணிக்கவாசகர் பாடுகிறார். தாயை விட சிறந்த தயை அளிக்கும் எம்பிரான் ஈசன் என்று. " என் அன்னையவளும் சொன்னாளே. அப்பன் நீ தானே " உன் மலரடி பட ஏங்கி ஏங்கி உயிர் நீத்தோர் ஏராளம். மனிதப்பிறவி எடுத்து கர்ம வினைகளை அனுபவித்து இறந்த பிறகு ( வட்டார வழக்கில் ) தலை போன பிறகு இந்த தலையில் இறைவன் தன் மலரடியை பதிக்க மாட்டானா? என்று ஏங்கித்தவிப்போர் உண்டு. கோவில் கொடி மரங்களில் சாஸ்தாங்கமாக விழுந்து வணங்குவோர் உண்டு. தரையோடு தலை வைத்து வணங்குவார். உன் மலரடி படத்தானே தரையோடு தலை வைத்தேனே " ஆடும் அழகிலும் அவன் அசையும் அழகிலும் அந்த தில்லை அம்பலத்தானின் நடனத்தைக் கண்டு கலியுறுவோமே அந்த ஆனந்தத்தை என்னவென்று சொல்வது ?? . அந்த தில்லை அம்பலத்தி...

Comments
Post a Comment