உலகம் ஓர் ஆச்சர்யம் குறி . தனக்கு தெரிந்தவற்றை விளக்கி கூறுகிறது . ஆனால் அது கொஞ்சம் வெட்டி எடுக்கப்பட்ட உண்மையின் ஒரு பகுதி தான் . அப்படி கூறப்பட்டவைகளில் கொஞ்சம் தான் மிச்சம் இருக்கிறது. எல்லாம் இருவேறாக பிரிந்து ஒன்றை ஒன்று ஆட்டிப்படைக்க நினைக்கிறது. உலகத்தின் இயல்பும் அதுவே அதில் ஆத்திகமும் நாத்திகமும் விதி விலக்கல்ல. அவ்வப்போது அவை தனது அரசியலைத் தொடங்குகிறது.
"வழி வேறு
அடைவது ஒன்று."
ஆத்திகம் தன்னை நிலைநாட்ட தொடங்கியது. எனக்கு தெரிந்தவரையில் மனிதன் ஒவ்வொருவனும் சிறப்பானவன் என்பதை நிலைநாட்ட தன்னால் மட்டுமே பிரிக்கமுடியும் என்று எண்ணும் இரண்டு என்ற பகா எண்ணைக்கொண்டு மனிதனை வடிவமைக்க தொடங்குகிறது இந்த பிரபஞ்சம்
இப்போது நாத்தீகத்தின் சுற்று
ஏன் இரண்டு. மூன்று கூட பகா எண் தான். ஏன் ஐந்து என்பதும் பகா எண் தான். படைப்புகளில் ஐந்து கண் . ஐந்து மூக்கு என்று படைத்திருக்கலாமே. என்ற கேள்வி ??
கேள்வி அருமை .
ஆத்திகத்தின் பதில் அம்பாய் பாய்கிறது. இரண்டு என்பது பல சிறப்புகளைக் கொண்டது . முதல் பகா எண்ணும் அது தான். ஒரே இரட்டைப்பகா என்னும் அது தான். மனிதன் தனக்கென ஒரு சிறப்பு உள்ளதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே இறை சக்தியின் குறிக்கோள்.
உரையாடல் தொடர நாத்திகத்தின் கேள்வி முன்வைக்கப்படுகிறது.மிருகங்களுக்கு நான்கு கால்கள் உண்டே.
அமைதியில் திளைத்தது ஆத்திகம். பதில் அறியும் ஆவலில் ஆராயத்தொடங்கியது நாத்திகம். இந்த பிரபஞ்சம் அனைத்தும் பகா எண்ணின் ஆதிக்கம் என்பதை உணர்ந்தது. இப்போது நாத்திகம் ஆத்திகத்தின் பகா எண்ணின் பாதையில்....
Comments
Post a Comment