மனிதன் தனக்கான பாதை என்று எதை நம்புகிறானோ அதுவே அவனை சிறைபிடிக்கிறது .சுற்றி திரிய வேண்டிய பறவையை கூண்டில் அடைத்தால் என்னவாகும். நல்ல அறிவுடைய மக்கள் நிறைய பேர் துயரத்தில் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். காரணம் அவர்கள் நிதி நிலைமை பற்றிய கவலை. பணமும் , அறிவும் ஒன்று சேர என்றுமே இருந்ததில்லை . இது தான் நியதிகள் போல . எனக்கு தெரிந்தவரையில் யாரேனும் துயரத்தில் இருக்கும் போது மற்றவர் வந்து சொல்லுவார். கவசம் பாடுங்கள் , நாமம் போற்றுங்கள் என்று. ஆனாலும் அங்கு நடப்பவைகளை தடுக்க முடிவதில்லை. கடவுளின் மீது நாம் வைக்கும் சிறு நம்பிக்கை விதியின் பெரும் தாக்குதலில் இருந்து நம்மை மீட்டெடுக்கிறது. ஆனால் விதி தான் வேலையை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறது. அதற்கு யாரும் விதி விலக்கல்ல. நான் உங்களுக்கு சொல்லும் விஷயம் என்னவெனில் நான் பெரியவன் என்று உங்களை நீங்கள் கூறிக்கொண்டால் இந்த பிரபஞ்சத்தில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து பாருங்கள்... அப்போது தெரியும் யார் பெரியவர் என்று???. பெரிய யானையின் காதில் எறும்பு புகுந்தால் என்னவாகும் ?? பெரிய பெரிய செல்வந்தர்களுக்கு விதி ஆற்றும் வினை குழந்தையின்மை. ரோட்டில் வாழ்பவனுக்கு விதி கொடுக்கும் தண்டனை குழந்தை வரம். நன்றாக யோசித்துப்பாருங்கள் நாம் எதை வெறுக்கிறோமோ அதையே பரிசாக தருகிறது விதி. விதியின் வினைகளுக்கு இறைவனும் கட்டுப்பட்டவர்கள் தான் . இல்லையேல் ஆலகால விஷத்தை இறைவன் உண்டிருக்க மாட்டான். தேவியர்கள் ஒன்பது அவதாரமும் , பாற்கடல் சீனிவாசன் பத்து அவதாரமும் கொண்டதெல்லாம் விதியின் விளையாட்டே. நம்பி நில்லுங்கள் , நடப்பவை நடந்தே தீரும்... இப்போது விதியும் நீங்களும் விளையாடுவதற்காக வாழ்க்கை என்னும் மைதான களத்தில் இருக்கிறீர்கள். உங்களுக்கான விளையாட்டை நீங்கள் விளையாடுங்கள். குறிப்பு என்னவெனில் என் சுற்று இன்னும் வரவில்லை என்பதை சொல்லுங்கள். எந்த நேரமும் கோவிலுக்கு வெளியே இருப்பவனால் கடவுளின் சிலையை பார்க்க முடிவதில்லை. கற்சிலையை பார்ப்பவனால் கடவுளை உணர முடிவதில்லை. வேண்டுதல் ஒன்றே . விதியும் அதுவே.ஆனால் விதி நமக்கு கற்பிக்க முயல்வதை கற்றுக்கொள்ளுங்கள் . மற்றவை எல்லாம் நலமே
என்றும் உங்கள்
ஆத்ம யோகி
Comments
Post a Comment