கந்த சஷ்டி நாள் 4
கந்தன் அருளே வினை தீர்க்கும் ஆயுதம். " ஓம் சரவண பவ " . கந்த சஷ்டி விரதம் இருப்பது நிறைய சிறப்புகளைத் தரும் . முனிவர்களும் ரிஷிகளும் கடைபிடித்த விரதம் இது. இன்று கந்த சஷ்டி நான்காம் நாள் விரதம். இந்த மூன்று நாட்களை கடந்து வந்துவிட்டோம். இந்த நான்காம் நாளில் விரதம் இருக்கும் முறைகளைப்பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். கந்த சஷ்டியிலிருந்து ஆறு நாள் வரை விரதம் அனுசரித்து, எளிமையான சைவ உணவுகளை , குறைந்த அளவில் எடுத்துக்கொண்டு விரதத்தை முழுமை யடைய செய்ய வேண்டும். விரதம் இருப்பவர்கள் போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். இன்று நான்காம் நாள் என்பதால்
கோலத்தில் " ண " என்னும் எழுத்தில் நெய் விளக்கேற்றி வழிபட்டால் தீமைகள் அகன்று நன்மைகள் விளையும். சரவண பெருமானின் அருளால் நம் வாழ்வில் வளம் நிறையட்டும் . கேட்டதை தரும் இந்த சஷ்டி மந்திரத்தை நாம் இந்த ஆறு நாட்களும் முறையான விரதம் இருந்து பூர்த்தி அடையச் செய்ய வேண்டும். சஷ்டியின் முழு அருளைப்பெற விநாயகப் பெருமானின் ஆசியைப்பெறுவது அவசியம். அதனால் விநாயகனை முழு மனதார வழிபட்டு புறத்தூய்மை கொண்டு அகம் முழுக்க இறைவன் முருகனை நினைத்து வழிபட வேண்டும்.
என்னென்னெ ஸ்துதி சொல்ல வேண்டும் ?
சஷ்டியில் இருக்கும் போது என்ன நைவேத்தியம் செய்யலாம் ?
இறைவன் இருக்க பயமேன் ?
8610994088
Comments
Post a Comment