Skip to main content

கற்றுக்கொள்ளவேண்டிய 63 நாயன்மார்கள் - 1


 அனுதினமும் நாடுவாய் 

ஆடுகின்ற அம்பலத்தானை 

உன்னுள்ளே பாருமே 

சொர்க்கம் வந்து சேருமே 

ஆத்ம யோகி 

தில்லை ஆனந்த நடனமாடும் அந்த கூத்தனின் திருவடிக்கு ஏங்கி நிற்பவர்கள் பலபேர். அதிலும் மிகுந்த பக்தி கொண்ட நாயனார் இவர்...... சிவன் பாதத்தில் மேல் மட்டுமல்ல சிவனடியார்கள் மீதும் மிகுந்த பக்தி கொண்டவர். பொய்யை துறந்து மெய்யிலே வாழும் துறவி. 

யார் இந்த நாயனார் ?? 

தில்லை கூத்தனின் மறுபெயராக கருதப்படும் திருநீலகண்டனின் நாமத்தை எந்நேரமும் உச்சரிப்பவர். நீலகண்டனை உருகி உருகி போற்றி வணங்கியவர்..

குயவன் மரபில் வந்த இவர் அடியார்களுக்கு தம் குல மரபுப்படி ஓடுகளை செய்து சிவனடியார்களுக்கு வழங்கி வந்தவர். நாயனாரின் மனைவியும் அவ்வாறே வாழ்ந்து வந்தவர். 

விதி அவருக்கு பெண் உருவில் விளையாட ஆரம்பித்தது. பரத்தையின் மேல் பற்று கொண்டு கூடலானார். நடந்தவை நாயனாரின் மனைவியை எட்ட விதி தன்னுடைய விளையாட்டை வலுவாக்கியது. 

பொய் நீக்கி மெய்யில் வாழும் நீலகண்டனுக்கு மனைவியிடமிருந்து கிடைத்தது மெய் தீண்டா வரம். இந்த வரம் திருநீலகண்டன்  மேல் சாட்சியாக நிறுவப்பட்டது. இந்த வரம் ஆண்டுகளைக் கடந்தது. முதுமை நண்பனையும் அழைத்துவந்தது.

பக்தன் மன உறுதியைக்கண்ட பரமன் சோதிக்க எண்ணியும் , நாயனாரின் பெருமையை உலகிற்கு பறை சாற்றும் விதமாக சாதுவாக திருவோடு ஏந்தி நாயனாரின் வீட்டை அடைந்தார். 

விருந்தினரை உபதேசிக்கும் முறையில் சிறு குறையும் இல்லை பிறகு தன்னுடைய திருவோட்டை நாயனாரிடம் கொடுத்து விட்டு " பத்திரமாக வைத்திரு " பிறகொரு நாளில் வந்து வாங்கிக்கொள்கிறேன் என்றார் சாது 

நாட்கள் சென்றது அன்றொரு நாளும் வந்தது. சாது திரும்ப வந்து தன்னுடைய திருவோட்டை தருமாறு கேட்டார். தேடி பார்த்த பின் வைத்த இடத்தில் காணாதது தெரிய வந்தது. 

உள்ளம் நொந்து போனார் திருவோடு இல்லாத விவரத்தை சாதுவிடம் கூற சாது கோபமுற்றார். என்னுடைய திருவோட்டை திருடிவிட்டாய் என்று சாது கூற இல்லை என்று மறுக்கிறார் நாயனார் அப்படியானால் உன் மகன் கை பிடித்து பொற்றாமரை குளத்தில் மூழ்கி சத்தியம் செய் என்றார் சாது எனக்குத்தான் மகன் இல்லையே என்று கூற மனைவி இருக்கிறாளே என்று கூறினார் சாது 

வழக்கு வழக்காடு மன்றம் சென்றது தில்லைவாழ் அந்தணர் அந்தணருக்கு முன் எடுத்துரைக்கப்பட்டது முடிவு சாதுவுக்கு சாதகமானது நாயனாரும் மனைவியும் பொற்றாமரை குளத்தில் மூழ்கி எழ இளமை திரும்பியது இறைவனும் காட்சி தந்தார் 

திருநீலகண்டன் மேல் பற்று கொண்ட அந்த நாயனார் திருநீலகண்டத்து குயவன் ஆனார் 

இதைத்தான் சுந்தரர் தனது பாடலின் இரண்டாவது வரியில் திருநீலகண்டத்து குயவனாருக்கும் அடியேன் என்று எடுத்துரைக்கிறார் அவர்தான் அடிகள் போற்றி போற்றி

பக்தி மார்க்கததில் அசைக்க முடியாதவர்கள் நமது நாயன்மார்கள். அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்வது என்னவெனில் எத்தனை சோதனைகள் வந்தாலும் பொறுமையையும் நிதானத்தையும் இழக்காமல் இருக்க வேண்டும் 


Comments

Popular posts from this blog

ஆரூர் தியாகேச பெருமான்

ஆரூர் தியாகேச பெருமானே  சுந்தரர் மேல் பேரன்பு கொண்ட தியாகேச பெருமானை வணங்கி இங்கு நாம் தொடங்குகிறோம். எல்லாவற்றிற்கும் முதலானதும் முதன்மையானதுமான அப்பன் என்பதால் என்னை ஈன்ற அன்னையவளும் அப்பன் அந்த ஈசன் தான் என்று அவன் நாமத்தையே பாடுகிறான். உலக உயிர்களை பிரசவித்த எல்லா உயிர்களும் அவனையே பாடுகின்றன அதனால் தான் மாணிக்கவாசகர் பாடுகிறார். தாயை விட சிறந்த தயை அளிக்கும் எம்பிரான் ஈசன் என்று.   " என் அன்னையவளும் சொன்னாளே. அப்பன் நீ தானே "  உன் மலரடி பட ஏங்கி ஏங்கி உயிர் நீத்தோர் ஏராளம். மனிதப்பிறவி எடுத்து கர்ம வினைகளை அனுபவித்து இறந்த பிறகு ( வட்டார வழக்கில் ) தலை போன பிறகு இந்த தலையில் இறைவன் தன் மலரடியை பதிக்க மாட்டானா? என்று ஏங்கித்தவிப்போர் உண்டு. கோவில் கொடி மரங்களில் சாஸ்தாங்கமாக விழுந்து வணங்குவோர் உண்டு. தரையோடு தலை வைத்து வணங்குவார்.  உன் மலரடி படத்தானே தரையோடு தலை வைத்தேனே " ஆடும் அழகிலும் அவன் அசையும் அழகிலும் அந்த தில்லை அம்பலத்தானின் நடனத்தைக் கண்டு கலியுறுவோமே அந்த ஆனந்தத்தை என்னவென்று சொல்வது ?? . அந்த தில்லை அம்பலத்தி...

தமிழன்னை

படித்துவிட்டு கருத்துக்களை பதிவிடுங்கள் வட திசையில் தலை வைத்தால் ஆகாது என்று தென் திசை கொண்டாளோ?? இந்த கன்னி இளம் குமரி கண்ட அவளுக்கு தலையணை எல்லாம் புலவனின் நூல் தானோ ?? அழகிய மொழி கொண்டு சீராட்டி வளர்த்தான் என் பாட்டன் புலவரெல்லாம் சொல்லேற்றி கவிபாடும் என் தமிழன்னையே வீணை நரம்பென மீட்டிவிடு என்னை இசை தெறிக்கும் பக்கமெல்லாம் என் இன்பத் தமிழும் பரவட்டும்....

சனிக்கிழமை இன்று வணங்க வேண்டிய தெய்வங்கள்

  சனிக்கிழமை இன்று வணங்க வேண்டிய தெய்வங்கள் 👇   #ஆன்மிகம் #ஆன்மீகதகவல் #aanmeekam #aanmeekathakaval #saturday #sanikilamai ஒவ்வ்ரு நாளும் ஒவ்வொரு பிறப்பு நமக்கு. இந்த நாளை வெற்றிகரமாக அமைத்துக்கொடுக்கும் நம் இறைவனுக்கு நன்றி சொல்லுவோம். சனிக்கிழமை என்றாலே பெருமாள் தான் நினைவுக்கு வருவார். சனிக்கிழமை வைணவர்களுக்கு உரிய நாளாக விளங்குகிறது என்று நமக்குத்தெரியும். ஆனால் சனிக்கிழமைகளில் பெருமாளை மட்டும் வழிபடுவதற்கு உகந்த நாள் இல்லை. சிலர் ஆஞ்சனேயர் , சனிபகவான் என்று வழிபடுவோருக்கு உண்டு. சனிக்கிழமைகளில் சனி பகவானை வணங்க சனிபகவானால் ஏற்படும் இடர்கள் நீங்கும் என்பது ஐதீகம். சிலர் சனிக்கிழமைகளில் கருப்பு நிற ஆடை அணிந்து விரதம் இருந்து வழிபடுவர். அவ்வாறு வழிபட்டால் துன்பங்கள் நீங்கி நல் பலன்களைப் பெறலாம் என்பது நம்பிக்கை.  Advertise                சனிக்கிழமைகளில் சிவ பெருமானை வணங்குதல் மிகச்சிறப்பு. அவ்வாறு வழிபாடும் போது அளவில்லா நன்மைகள் கிடைக்கப்பெறும். ஒரு முறை சனிக்கிழமைகளில் சிவன் கோவிலுக்கு சென்று பாருங்கள். அதன் பலன்களை நீங்கள...