🔵 பாலைச் சோதனையாக்கி
கெடா நெய்யாக
எனை கிடைத்திடச் செய்திடுவாய்
உத்திர கோச மங்கைக்கு அரசே!!!!
🔵 ஏர் பூட்டி எனை பிளவிட்டு
நல்லதை விதைத்திடுவாய்
நலமங்கை சிவகாமியோடும்
உறையும் நடராச பெருமானே
🔵 புறத்தே வாழும் ஆசை இல்லையெனினும்
அகத்தே உனை சுமந்தேன்
அப்பா நீ என என்னும்
என் அண்ணாமலையானே
🔵 வளர்கின்ற நிலவென
என்னாசை உன் மேலே
பிறை சூடிய எம்பெருமானே
உனைச் சேரும் நாளே
என் நன்னாளே
🔵 மறுத்தேன் எனினும்
விட்டிடாது எம்பெருமான்
பொறுத்து எனை
ஆட்கொள் கட்சி ஏகம்பனே
🔵 பண்ணுகின்றேனே ! பண்ணிசைத்தேனே !!
மதுரை அரசே !!
மறப்பாயோ !! எனை
இடம் ஏதும் இல்லை
திரு நின்ற உன் கழல்களைத் தவிர...

Comments
Post a Comment