உள்ளொன்று வைத்து புறமொன்று
இன்று உங்களுக்கு எல்லா வளமும் நலமும் இறைவன் அருளட்டும்
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
" உள்ளொன்று வைத்து புறமொன்று " என்ற பாடல் பிறந்த கதை. இளவயது ஜோதியானது காஞ்சிபுரம் மகாவித்வான் சபாபதி முதலியாரிடம் கல்வி பயில வேண்டி காலம் எடுத்துரைத்தது. ஆனால் அந்த அருட்பெருஞ்ஜோதியானது ஜோதியிலே உருவான கந்த கோட்ட பெருமானை அணுகியது. சந்தேகம் என்ற தூது சபாபதி முதலியாரை அருட்பெரும் ஜோதியை பின் தொடர ஜோதியானது கந்த கோட்ட பெருமானை நெருங்கி பண் இசைக்க ஆரம்பித்தது. அந்த பண் தான்
"உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் "
ஆன்மீக பாதையின் தொடக்கம் அது தான். இனி உலகியல் கல்வி இவருக்கு தேவை இல்லை என்று தன குருவினால் உரைக்கப்பட்டு ஆன்மீக பயணத்தை தொடங்கினார். வள்ளலாரின் பாடல்களை கேட்டால் பட்ட மரத்தத்திலும் உள்ளொளி எழும்பும் . இந்த பாடலில் நீங்கள் என்ன உணர்ந்தீர்கள் என்பதை 9688884185 என்ற எண்ணில் பகிரலாம்.
அன்பார்ந்த பக்தர்களே
உள்ளம் உருகி என் சதை என்னும் பின்னடத்தில் ஊற்றப்பட்ட நெய்யில் ஏற்றினேன் விளக்கொன்று. அது காற்றில் அங்கும் இங்கும் அசைந்து ஆடியாது. பேசியது அந்த ஒளி என்ன தேடிக்கொண்டிருக்கிறாய் ? .
கடவுள் இதுவா ? , அதுவா ? என நான் ஒவ்வொரு இடத்திலும் தேடிக்கொண்டிருக்கிறேன் ஆனால் காண முடியவில்லை. ஒளி தரும் விளக்கே. பதில் சொல்லேன். அறியாமை இருளில் இருக்கும் எனக்கு கொஞ்சம் வெளிச்சம் காட்டு.
இறைவன் உனக்குள்ளேயே ஆனந்த மயமான ஜோதியாக இருக்கிறார் என்பதை நீ அறியவில்லையா ? . அந்த ஜோதி தான் நீ நேசிக்கும் இறைவன்.
ஒன்றை புரிந்துகொள்!!! மிகப்பெரிய ஆன்மீகவாதிகள் சொல்வதெல்லாம் நம்மை நாம் உணர வேண்டும் என்பதே. இறைவனை அடையும் மார்க்கத்திற்கு எத்தனை வழிகள். இந்த வழியில் தான் போக வேண்டும் என்பதில்லை, ஆனால் நாம் அனைவரும் சேரும் இடம் இறைவன் என்கின்ற மிகப்பெரிய கடல். சிலர் கணபதியை , சிலர் முருகனை , சிலர் அம்பாளை , சிலர் ஈசனை , சிலர் பெருமாளை , இப்படி வெவ்வேறு உருவங்களில் வணங்கினாலும் அருள் ஒன்றே.
நிறைவான இறைவனை அடைய நாம் என்ன செய்ய வேண்டும் ? இருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது பனைமரத்தில் ஒரு பச்சோந்தியை கண்டனர். ஒருவன் அது சிவப்பு நிறம் என்க , மற்றொருவன் அதை நீல நிறம் என்று சொல்ல வாக்கு முற்றி சண்டையானது . அருகில் இருந்த சன்யாசியிடம் இதைக்கூற சந்யாசியோ நீ பார்க்கும் போது அது சிவப்பாகவும் , அவன் பார்க்கும் போது அது நீல நிறமாகவும் காட்சியளிக்கிறது என்றார். இறைவனும் அப்படியே. வேறு வேறு விதங்களில் வழிபடுகிறோம் ஆனால் இறைவன் என்பவன் ஒருவன். ஆனந்த மயமாக எங்கும் நிறைந்த காற்றாக இருக்கிறான் .
Comments
Post a Comment