இறைவா !!
🔵 உன் குறிப்பு கண்டேன்
எண்ணத்தில் எழுதியது
ஏட்டில் மிளிர்ந்தது
ஆட்கொண்ட விதத்தை
எப்படி சொல்வேன் !!
🔵 நில்லாய் பரம்பொருளே
நின் மலரடியில்
கண்ட சொர்க்கமே
என் நிம்மதி
🔵 கனிந்து முற்றி
காம்பிலிருந்து விடுபட்ட கனிகள்
மண்ணிற்கு சுவை சேர்க்கிறது
அவை தானோ அடியார்கள்
🔵 அத்தனையும் என்னை ஏற்றுக்கொள்
என தியாகம் செய்ய
தயாராகி விட்டன என்னைத்தவிர
விரைந்து சொல் என் இறைவா
🔵 இனியும் சோதனை வேண்டாமே
கதவே அடையா சிவபுரத்தின்
கருணா மூர்த்தியே
கரம்பிடித்து கரை தேற்றுவாய்
காத்திருக்கிறேன்

Comments
Post a Comment