நாம் தனிமையில் அமர்ந்திருக்கும் போது எதைப்பற்றியாவது நினைப்பது உண்டு . அன்றைய நாள் தனிமையில் யோகிகளையும் , மகான்களையும் பற்றிய நினைவு. சிந்திக்காமல் இருக்கின்ற வித்தையை இந்த பிரபஞ்சம் அவர்களுக்கு எப்படி கற்றுக் கொடுத்திருக்கிறது. எல்லோரும் முயல்கிறோம் ஆனால் ஏதாவது ஒரு பிடிப்பு இருக்கிறது. ஒருவேளை அவர்கள் சிந்தித்தால் யாரைப்பற்றி சிந்திப்பர். இறைவனைப்பற்றி சிந்திக்கிறார்கள் எனில் இறைவன் நம்மோடு வாழ்வதாக அர்த்தம். ஏனெனில் இல்லாத ஒன்றை சிந்திப்பது என்பது இயலாதவை. இறைவன் இல்லையெனில் அவர்கள் சிந்தனையில் நிறைந்திருப்பவர் யார்??.
நமதுஇந்து தர்மம் ஆதியும் அந்தமும் அற்றது. இந்து தர்மம் இரண்டு குழந்தைகளை நமக்கு கொடுத்திருக்கிறது. ஒன்றன் பெயர் பக்தி மார்க்கம் எனவும் , ஒன்றன் பெயர் ஞான மார்க்கம்.எனவும் ஆகும். நமக்கென அவைகள் வகுத்துக் கொடுத்தவை எதிர்கால சந்ததி நலமாய் வாழ நன்னெறியும் , நலம் பெற்றவை அடுத்த சந்ததிக்கு சொல்லும் பாடம் கடமை எனவும் , இந்த கடமைகளில் நாம் நழுவும் போது அவைகளை எடுத்துச்சொல்ல மகான்களின் உயர்வும் அவசியமாகிறது.
தமிழ் எழுத்துக்களை படைக்கும் போதே இறைவன் திட்டமிட்டு படைத்திருப்பான் போலும். காரணம் உயிர் எழுத்துக்களின் வரிசையில் முதலில் குறிலும், பிறகு நெடிலும், மாறி மாறி அமைவதன் நோக்கம் இன்ப துன்பம் கலந்ததே வாழ்க்கை என்பதை உணர்த்தவே. ஆகும்
ஒரு நதியானது மலை மேடு பள்ளங்களை கடந்து அருவியாய் விழுந்து பின்னர் தான் கடலில் கலக்கிறது. அதுபோல இறைவனை அடைய நாம் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.இங்கு நாம் ஆராய வேண்டியது கடவுளை பற்றி அல்ல. இன்ப துன்பஙகளிலிருந்து நாம் அடையும் படிப்பினையும் , அதனால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் மட்டுமே ஆகும்
இங்கு எதுவுமே பழைய வினைகள் அல்ல ஒவ்வொன்றும் புதுவினை ஒருவருக்கு ஏற்படும் துன்பஙகளை மற்றவர் காணும் போது அது ஏதோ புது அனுபவம் போல தோன்றும். புதுவினைகள் ஏற்படும் போது அவற்றைத் தீர்ப்பதற்கு நாம் தவித்துக்கொண்டு இருக்கிறோம் . அப்பொழுது தான் நாம் இறைவனை நினைக்கிறோம். இறைவன் நேரடியாக வந்து சேர்வதில்லை. மாறாக அவர்களின் சேவகர்கள் வந்து சேர்கிறார்கள். உதாரணம் ரமண மகரிஷி, காஞ்சி மஹா பெரியவர், வள்ளலார் போன்றோரை நாம் கூறலாம்.
காரணம் என்னவெனில் ஒரு துன்பம் நேர்கையில் இவர்கள் அவர்களை தேடுவது வழக்கம். அவ்வாறு தன்னை அறியும் ஞானத்தை தேடுபவர்கள் மஹா பெரியவாவை ஏற்றுக்கொள்வார். காரணம் அவரின் எளிய உரைகள் அப்படி இருக்கும். பாமரனும் ஞானத்தை அடையும் பாக்கியம் அது.
நம் பிறவிப்பலனில் ஒட்டிக்கொண்டிருக்கும் கர்ம வினைகள் நீங்க மகான்களின் அனுக்கிரகம் அவசியம் அவர்களின் வழிகாட்டுதல் என்பது மிக முக்கியமான ஒன்று.
ஆக மகான்கள் , ரிஷிகள் , முனிவர்கள் , சித்தர்கள் என அனைவரும் நம்மைப்பற்றிய சிந்தனையிலேயே மூழ்கி இருக்கின்றனர் என்பது தெளிவு.இப்போது அவர்கள் சிந்தனையில் நிறைந்திருப்பவர்கள் நாம் என்னும் பிரபஞ்சமே .
Comments
Post a Comment