குளிர்ந்து பின்
நெருப்பாகி மறுபடியும்
குளிர்ந்து கொண்டிருக்கிறது சாலை
ஏற்ற இறக்கத்தோடு
மாற்றம் ஒன்றே
மாறாத உண்மை என்ற தத்துவத்தோடு
வானம் என்னும் கூரைக்கு கீழே
வாழும் நாங்கள் நெடுஞ்சாலை வாசிகள்
அவ்வப்போது கண்ணீர் சிந்தும் வானம்
- எங்களுக்காக
கண்ணீரில் நினைத்தபடி
கடந்து கொண்டே செல்கிறது வாழ்க்கை
அளவுக்கு மிஞ்சி அள்ளியதால்
கைக்கொள்ளாமல் சிந்தும்
வெப்பக்கதிர்கள் வேறு .....
வீண் என்று ஒதுக்கிய உணவுகளெல்லாம்
அமிர்தம் போல காட்சியளிப்பதெல்லாம்
பசி தந்த வரத்தினாலே
அத்தனையும் அனுபவித்துவிட்டு
அணைந்து விடுகிறது வாழ்க்கை
நெடுஞ்சாலை ஓரத்திலே.......
Nice
ReplyDelete