கந்த சஷ்டி நாள் 3
இன்று
தேதி : 24 - 10 - 25
தமிழ் மாதம் : ஐப்பசி 7
சிறப்பு : கந்த சஷ்டி 3 ம் நாள்
நாள் மாறுகிறது ஆனால் வழிபாடு ஓன்று தான். இன்று 24 - 10 - 25 கந்தசஷ்டியின் மூன்றாம் நாள். வழிபாடு என்ன ? எப்படி செய்ய வேண்டும் ? . இறைவனை நாம் வழிபாடு செய்யும் முறையைப் பொறுத்து நாம் வெவ்வேறு விதமான பலன்களைப் பெறுகிறோம் . அந்த வகையில் இன்று மூன்றாம் நாள். எந்த வகையான பலன்களைப் பெறப் போகிறோம் ? . வாழ்க்கையில் நமக்கு தீர்க்க முடியாத பிரச்சனைகள் நம்மை விட்டு நீங்கவும் , வாழ்வில் செல்வம் பெருகி மிக உயர்ந்த நிலைக்கு வரவும் இந்த மூன்றாம் நாள் விரதத்தை தவற விடாமல் கடைபிடிக்க வேண்டும்.
இதை விரதம் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் முருகனை மனதார வழிபடும் அன்பர்களும் செய்யலாம். முருகனின் ஆறெழுத்து மந்திரமான
" ச ர வ ண ப வ " உச்சரித்தது இன்றைய விரதத்தை தொடங்குவோம். ஒரு நாளைக்கு ஒரு எழுத்து என்கின்ற வீதம் ஆறு நாளைக்கு ஆறெழுத்து என்று கொண்டு தொடங்க வேண்டும். இன்று மூன்றாம் நாள் கோலத்தில் " வ " என்ற எழுத்தில் விளக்கேற்றி வழிபடலாம். அவ்வாறு வழிபாடும் போது மஹாலக்ஷிமியின் பரிபூரண அருளைப்பெறுகிறோம். இதனால் வறுமைகள் நீங்கி வாழ்வில் வளம் சேரும்.
கந்த சஷ்டி 3 ம் நாளுக்கானது
விநாயகர்
ஐந்து திருக்கரமும்
ஆணை முகமும்
தொந்தி வயிற்றோடும்
நண்பனென வந்த நாயகனே
விநாயகனே ....
பாற்கடல் அமுதம் நீ
கற்பக விருட்சமும் நீ - என
தேவர்கள் போற்றும்
முழு முதற்கடவுளே சரணம்
முருகன்
ஏங்கித் தான் தவிக்கிறது - மனம்
எந்தன் முருகா
பாலூட்டி வளர்த்தவன் அன்னை எனினும்
தோள் கொடுத்தது வளர்த்தவன் நீதானே
கருவுற்று பத்து திங்களில் கண்டேன்
என் வினையென்னும் உலகம்
வினை நீக்கி ஆட்கொள்ளேன்
காத்துக் கிடக்கிறேன் கந்தா
உன் அருட் பார்வை ஒரு முறையேனும் தா
---------------------------------------------------------------------------------
கூற வேண்டிய மந்திரம்
வாசிப்போம் : கந்த சஷ்டி நாள் 1
மேலும் : கந்த சஷ்டி நாள் 2
" ஓம் சரவண பவ " என்ற இந்த மந்திரத்தைக் கூறி இன்றைய நாளின் விரதத்தை இறைவன் அருளால் பூரணம் அடையச் செய்வோம்
Comments
Post a Comment