இன்று சஷ்டி ஆறாம் நாள் விழா
அதோ அன்னை ஆதி பராசக்தியிடம் வேல் வாங்கி புறப்பட்டு விட்டார் செந்தில் ஆண்டவன். சூர பத்மனை இந்த நாட்களும் தூது அனுப்பி சமரசம் செய்து பார்த்தாகிவிட்டது. அவன் வலிக்கு வருவதாக தெரியவில்லை. இன்னும் ஒரு முறை தூது அனுப்புவோம் என்று எங்கள் செந்தில் ஆண்டவர் காத்திருக்கிறார் .
என் மனமென்னும்
எங்கள் செந்தில் ஆண்டவன் இரக்க குணம் அதிகம் உள்ளவன். . அந்த சிவனாரின் மகன் , முனிவர்களும் ரிஷிகளும் போற்றும் ஞான பண்டிதனை ஒரு முறையேனும் காண் . உன் தீய எண்ணம் யாவும் மறையும். நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது . ஆறு விளக்கு ஏற்றி ஓம் சரவண பவ என்னும் மந்திரத்தை உச்சரித்து நீ உருக உருக வேண்டு .ஐந்து நாட்கள் விரதம் கடைப்பிடித்து விட்டாய். இன்று ஆறாம் நாள். இந்த ஐந்து நாளும் விரதம் இருக்க முடியாதவர்கள் இன்று ஒரு நாள் விரதம் இருந்து சஷ்டியின் விரதத்தை பூர்த்தி செய்வர். அப்படி ஒரு நாள் விரதம் இருப்பவர்கள் முருகனை கணப்பொழுது கூட மறவாமல் உள்ளம் உருக வேண்டி பிரார்த்தனை செய்வர்.
அப்பேற்பட்ட அந்த அடியவரின் நிழல் பட அருகில் உள்ள கோவிலுக்கு செல். முருகப்பெருமானை வில்வம் கொண்டு பூஜை செய். வாழ்வு வளம் பெறும்.
இன்றைய நாளுக்கானது
ரீங் ரீங் என்று
ஒலி எழுப்பிய
வண்டுககளை போலும்
சாரை சாரையாய்
ஊரும் எறும்புகள் போலும்
அடியார் கூட்டம்
அரோகரா பாட
மயிலேறி வேல் பிடித்து
செந்தூரின் கடற்கரையிலே
அடர்ந்த இலைகளுக்கு
மத்தியில் எழுந்து
நின்ற ஒற்றைப்பூ
குலம் காக்கும்
குறிஞ்சி பூ
குமரா நீ
எங்கள் குலம் காக்கும்
குறிஞ்சிப்பூ
கந்தனை பற்றிடத்தானே
கைகள் ஏங்குது
கந்தா முருகா கருணைக்கடலே
நீயே சரணம்
இந்த ஆறு நாட்களும் தொடர்ந்து விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடும் அன்பர்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்றிட இறைவனை பிரார்த்திக்கிறோம். மேலும் உங்களுடைய ஆதரவைத் தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த ஆறு நாளுக்கான கவிதையை எழுதியவர் ந . கதிரவன் , 9688884185
-------------------------------------------------------------------------------------------------------------
மேலும் வாசிக்க : click here
Comments
Post a Comment