Skip to main content

குழந்தையை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆன்மீக கல்வி

குழந்தையை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆன்மீக கல்வி 

திருச்சிற்றம்பலம் 


அன்பார்ந்த பக்தர்களே 
               💓 நமக்கு இன்று மிக முக்கிய தேவை ஆன்மீக கல்வி. ஆன்மீகத்தில் இருக்கும் போது நாம் நம்மை அறிகிறோம் . நாம் நம்மை அறியும் போது  எந்த வித தீங்கும் ஏற்படுவதில்லை. பக்தி மார்க்கம் என்பது இறைவனை அடைவதற்கு மட்டும் சிறந்த வழி அல்ல. நாம் நம்மை தெரிந்து கொள்வதற்கும் பயன்படுகிறது.ஆதலால் தான் நமது இலக்கியங்களில் முதலாவதாக கடவுள் வாழ்த்தை கொண்டு தொடங்குகின்றன. அப்படிப்பட்ட ஆன்மீகத்தில் தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனின் பிறப்பு ரகசியங்களை அறிந்து கொள்ள செய்யும் மந்திரமான கந்த சஷ்டியை வழிபாடு செய்வது அவசியம். நாமும் நமக்கு பின் வரும் சந்ததியினருக்கும் இது பற்றி தெரிவது மிகவும் அவசியம். வளர் இளம் தலைமுறையினருக்கு ஆன்மீக கல்வியை அளிப்பதன் மூலம் ஒழுக்க சிந்தனையுள்ள ஒரு வலிமையான சமுதாயத்தை நம்மால் நிறுவ முடியும். அன்பர்களே , குழந்தைகள் சமய சின்னங்களை அணிய விருப்பப்பட்டால் தடுக்காதீர்கள். உதாரணமாக சிறியதாக திருநீறு பூசுவது , ருத்ராக்ஷம் அணியும் போது இந்த இன்னும் உனக்கு வயது இருக்கு என்று சொல்லி தடுக்காதீர்கள். 
           💓 உரிய குருவைத் தேடுங்கள். அதை உங்களது குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுங்கள். குருவின் மீதான அன்பு , பக்தியை சொல்லி வளருங்கள். வயதானவர்களுக்கு சேவை செய்யும் மனா பக்குவத்தை சிறு வயதிலிருந்தே கற்றுக்கொடுங்கள். இதுவெல்லாம் ஆன்மீக கல்வியின் அடிப்படையில் வந்து சேரும். நிறைய கதைகளை சொல்லி வாருங்கள். அது குழந்தைகள் தனது பாதையை தேர்ந்தெடுக்க வழி வகுக்கும். 

            💓சத்ரபதி சிவாஜி மகாராஜாவுக்கு அவரது அன்னை கதை சொல்லி வளர்ப்பார்களாம். இப்படி மிக உன்னத நிலையில் இருப்பவர்கள் அனைவரும் ஆன்மீக கதைகளை கேட்டு வளர்ந்தவர்கள். குறிப்பாக ராமாயணம் , மஹாபாரதம்.... இவை இரண்டிலும் வாழ்க்கை தத்துவங்கள் மிக அதிகம்.  

        💓மேலும் நமது கலாச்சாரங்கள் , பாரம்பரிய முறைகள் அனைத்தையும் கைவிடாமல் பேணிப்பாதுகாக்கும் எண்ணத்தையும் வளர்க்க வேண்டும். என்று நமது கலாச்சாரங்கள் அழிய ஆரம்பிக்கிறதோ அங்கிருந்து நாம் நம்மை அழித்துக் கொண்டிருக்கிறோம். 

        💓அன்பர்களே நீங்களும் உங்கள் சந்ததியும் நலமுடன் வாழ ஆசைப்பட்டால் அருகில் கோவில்களில் நடக்கும் ஆன்மீக பேச்சாளர்களின் சொற்ப்பொழிவிற்கு அழைத்துச்செல்லுங்கள். அது மேலும் நற்சிந்தனையை வளர்க்கும். 
        

    ஆன்மீகத்தின் இலக்கு நமது வாழ்வை சீரமைப்பதே. நலம் பெறுவோம் 

      

கந்த சஷ்டி  ஏழு நாள் விழா இங்கு ஏழாவது நாள் என்பது திருக்கல்யாண வைபவம் இந்த கந்த சஷ்டி நாளில் ஆறு நாட்கள் விரதம் இருந்து ஏழாம் நாள் திருக்கல்யாண வைபவம் பார்ப்பது மிக சிறப்பு . இந்த ஆறு நாட்களைப்பற்றி படிக்கலாமே நாம் . 

நாள் ஓன்று 

நாள் இரண்டு 

நாள் மூன்று 

நாள் நான்கு

கந்த சஷ்டி நாள் 5

இன்று சஷ்டி ஆறாம் நாள் விழா

இன்று கந்த சஷ்டி 7 ம் நாள் .

Comments

Popular posts from this blog

ஆரூர் தியாகேச பெருமான்

ஆரூர் தியாகேச பெருமானே  சுந்தரர் மேல் பேரன்பு கொண்ட தியாகேச பெருமானை வணங்கி இங்கு நாம் தொடங்குகிறோம். எல்லாவற்றிற்கும் முதலானதும் முதன்மையானதுமான அப்பன் என்பதால் என்னை ஈன்ற அன்னையவளும் அப்பன் அந்த ஈசன் தான் என்று அவன் நாமத்தையே பாடுகிறான். உலக உயிர்களை பிரசவித்த எல்லா உயிர்களும் அவனையே பாடுகின்றன அதனால் தான் மாணிக்கவாசகர் பாடுகிறார். தாயை விட சிறந்த தயை அளிக்கும் எம்பிரான் ஈசன் என்று.   " என் அன்னையவளும் சொன்னாளே. அப்பன் நீ தானே "  உன் மலரடி பட ஏங்கி ஏங்கி உயிர் நீத்தோர் ஏராளம். மனிதப்பிறவி எடுத்து கர்ம வினைகளை அனுபவித்து இறந்த பிறகு ( வட்டார வழக்கில் ) தலை போன பிறகு இந்த தலையில் இறைவன் தன் மலரடியை பதிக்க மாட்டானா? என்று ஏங்கித்தவிப்போர் உண்டு. கோவில் கொடி மரங்களில் சாஸ்தாங்கமாக விழுந்து வணங்குவோர் உண்டு. தரையோடு தலை வைத்து வணங்குவார்.  உன் மலரடி படத்தானே தரையோடு தலை வைத்தேனே " ஆடும் அழகிலும் அவன் அசையும் அழகிலும் அந்த தில்லை அம்பலத்தானின் நடனத்தைக் கண்டு கலியுறுவோமே அந்த ஆனந்தத்தை என்னவென்று சொல்வது ?? . அந்த தில்லை அம்பலத்தி...

தமிழன்னை

படித்துவிட்டு கருத்துக்களை பதிவிடுங்கள் வட திசையில் தலை வைத்தால் ஆகாது என்று தென் திசை கொண்டாளோ?? இந்த கன்னி இளம் குமரி கண்ட அவளுக்கு தலையணை எல்லாம் புலவனின் நூல் தானோ ?? அழகிய மொழி கொண்டு சீராட்டி வளர்த்தான் என் பாட்டன் புலவரெல்லாம் சொல்லேற்றி கவிபாடும் என் தமிழன்னையே வீணை நரம்பென மீட்டிவிடு என்னை இசை தெறிக்கும் பக்கமெல்லாம் என் இன்பத் தமிழும் பரவட்டும்....

சனிக்கிழமை இன்று வணங்க வேண்டிய தெய்வங்கள்

  சனிக்கிழமை இன்று வணங்க வேண்டிய தெய்வங்கள் 👇   #ஆன்மிகம் #ஆன்மீகதகவல் #aanmeekam #aanmeekathakaval #saturday #sanikilamai ஒவ்வ்ரு நாளும் ஒவ்வொரு பிறப்பு நமக்கு. இந்த நாளை வெற்றிகரமாக அமைத்துக்கொடுக்கும் நம் இறைவனுக்கு நன்றி சொல்லுவோம். சனிக்கிழமை என்றாலே பெருமாள் தான் நினைவுக்கு வருவார். சனிக்கிழமை வைணவர்களுக்கு உரிய நாளாக விளங்குகிறது என்று நமக்குத்தெரியும். ஆனால் சனிக்கிழமைகளில் பெருமாளை மட்டும் வழிபடுவதற்கு உகந்த நாள் இல்லை. சிலர் ஆஞ்சனேயர் , சனிபகவான் என்று வழிபடுவோருக்கு உண்டு. சனிக்கிழமைகளில் சனி பகவானை வணங்க சனிபகவானால் ஏற்படும் இடர்கள் நீங்கும் என்பது ஐதீகம். சிலர் சனிக்கிழமைகளில் கருப்பு நிற ஆடை அணிந்து விரதம் இருந்து வழிபடுவர். அவ்வாறு வழிபட்டால் துன்பங்கள் நீங்கி நல் பலன்களைப் பெறலாம் என்பது நம்பிக்கை.  Advertise                சனிக்கிழமைகளில் சிவ பெருமானை வணங்குதல் மிகச்சிறப்பு. அவ்வாறு வழிபாடும் போது அளவில்லா நன்மைகள் கிடைக்கப்பெறும். ஒரு முறை சனிக்கிழமைகளில் சிவன் கோவிலுக்கு சென்று பாருங்கள். அதன் பலன்களை நீங்கள...